கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:

கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை


" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23  பேருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு கண்டறியப்பட்டது.
 இதில் போடியை சேர்ந்த ஒரு பெண் பலியானார்.மீதம்  21 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


 கொரனோ வைரஸ்  பாதிக்கப்பட்ட நபர்களின் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன..
 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் யாருக்காவது வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.


 இதற்காக நேற்று அவர்களின் வீடுகளில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நபராக பரிசோதனை செய்தனர். 


 அவர்களுக்கு காய்ச்சல் சளி இருமல் உள்ளதா என பரிசோதனை செய்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில்  சேர்ந்த 87 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 
 முதற்கட்டமாக போடி பகுதியைச் சேர்ந்த 40 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
 அவர்களிடமிருந்து சளி மாதிரி எடுத்து தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


 பரிசோதனையின் முடிவு தெரிய வரும்போது அவர்களுக்கு என்னவென்று தெரியும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.


 இதைப்போல் வெளிநாடுகளில் இருந்து தேனிக்கு திரும்பி வந்தவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.